Fwd: [PSG1984] Njoy the life my dear...- part 2
undefined undefined undefined Filed under: Author:ஆனந்த வாழ்க்கைக்கு.... (தொடர்கிறது.......)
90.நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற 'ஐங்க்' உணவுகளை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.
90.நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற 'ஐங்க்' உணவுகளை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.
91.குழந்தைகளைப் பாராட்டவும், உற்சாக மூட்டவும் சாக்லட்டுக்கள், சிப்ஸ் வகைகளைக் கொடுத்துப் பழக்காதீர்கள்.
92.தொலைகாட்சி பார்த்துக்கொண்டே வெந்ததை விழுங்காமல், தினமும் குறைந்தது இரவு உணவையாவது அனைவரும் சேர்ந்து சாப்பிடுங்கள். ஆனந்தமும், உற்சாகமும், ஆரோக்கியமும் தங்கும்.
93.உப்பு,எண்ணையை உணவில் குறைத்துப் பழகுங்கள்.அவை உங்கள் ஆரோக்கியத்தின் எதிரி.
94.புகை,மது, அதிக காபி போன்றவை ஆரோக்கியமான உடலின் எதிரிகள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவில் நிறுத்துங்கள்.
95.மன அழுத்தத்தை குறையுங்கள். யோகா, தியானம், ஆன்மீகம் என உங்கள் மனதை அமைதிப்படுத்துபவற்றில் கவனம் செலுத்துங்கள்.
96.பேச்சிலும் செயலிலும் உண்மையைப் பின்பற்றுபவர்களுக்கு மன நிறைவான வாழ்க்கை அமைவது உறுதி. பொய் பேசுபவர்களுக்கு ஆனந்தம் அந்நியமாகிவிடும். நிங்கள் சொன்ன பொய்யும் அதனால் ஏற்பட்ட மனச்சுமையும் சதா உங்களைத் துரத்திக்கொண்டிருக்கும். மற்றவர்களால் கண்டறியப்படும் உங்களின் சிறு பொய் கூட சமூகத்தில் நீங்கள் பல காலம் சம்பாதித்து வைத்திருக்கும் நன் மதிப்பை பாழ் செய்துவிடும்.
97.கடந்தகால கவலைகள், சோகங்கள், அவமானங்கள் போன்ற நிகழ்வுகளை நினைத்து நினைத்துப் பார்ப்பதில்பயன் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. அதேபோல, 'எதிர்காலத்தில் நோய் வந்திடுமோ , வேலை போய்விடுமோ' என கற்பனையான பயம் முன்பாக மண்டியிட்டு பதறி, வாழும் நிகழ்காலத்தை நழுவ விட்டுவிடாதீர்கள். 'லிவ் த மொமென்ட்' என்பார்கள். இந்த நிமிடத்தை அனுபவித்து வாழுங்கள்.
98.வரவுக்கு ஏற்ற என்பது மிக முக்கியம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை, பிள்ளைகளின் பாடசாலை கட்டணம் எல்லாம் எந்த தேதியில் வரும் என்பது பல மாதங்களுக்கு முன்பே அறிந்து கொள்ள இயலும் என்பதால், அந்த செலவுகளுக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே சேமியுங்கள். கூடவே கடன் இல்லாத வாழ்க்கையே ஒரு பெரிய நிம்மதிதான். தேவைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசம் அறிந்திருப்பதும் நல்லது.
99.பெற்றோர்களை மதியுங்கள். குறிப்பாக வயதான காலத்தில் அருகில் வைத்துப் பராமரியுங்கள். அவர்கள் மறைவிற்கு பிறகும் நீங்கள் குற்றவுணர்ச்சி இல்லாமல் மனநிறைவோடு வாழலாம் .
100.உங்களை நேசிக்க, மதிக்க மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள். நீங்களே உங்களை கொண்டாடுங்கள். உங்களை எப்போதும் மனதுக்குள் உயர்வாகவே நினையுங்கள். அதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆடை ஆபரணங்களால் உடலை அலங்காரம் செய்வதுடன் மறக்காமல் முகத்தில் சிரிப்பை அணிந்து கொள்ளுங்கள்.
தீதும் நன்று பிறர் தர வாரா' என்ற கண்ணியன் பூங்குன்றனாரின் வரிகளைப்போல,
நம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நம்முடைய செயல்களே தீர்மானிக்கும்.
வாழ்க்கை என்பது ஒரு பயணம்.
அதன் ஒவ்வொரு எல்லைக் கல்லையும் கொண்டாடுங்கள். பயணம் நிறைவாக முடியும்!
Regards,
R.Balakrishnan.
நம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நம்முடைய செயல்களே தீர்மானிக்கும்.
வாழ்க்கை என்பது ஒரு பயணம்.
அதன் ஒவ்வொரு எல்லைக் கல்லையும் கொண்டாடுங்கள். பயணம் நிறைவாக முடியும்!
Regards,
R.Balakrishnan.
There is only one formula for success: Stop thinking in terms of limitations and start thinking in terms of possibilities.
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
வருவது எதையும்
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
அன்புடன்...
பாலகிருஷ்ணன்.
பாலகிருஷ்ணன்.

No response to "Fwd: [PSG1984] Njoy the life my dear...- part 2"
Post a Comment